வத்தலக்குண்டு அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

வத்தலக்குண்டு அருகே பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
வாலிபர் கைது
வாலிபர் கைது
Published on

வத்தலக்குண்டு:

ஆண்டிப்பட்டியில் இருந்து வத்தலகுண்டுக்கு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அன்புச்செல்வம் என்பவர் ஓட்டினார். பஸ் பழைய வத்தலகுண்டில் பயணிகளை இறக்கிவிட்டு புறப்பட்டது.

அப்போது மது போதையில் வந்த 3 பேர் பஸ்சை வழிமறித்தனர். அதற்கு டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் மெதுவாக நகர்த்தினார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கோபத்தில் அவர்கள் பஸ் மீது கல்வீசினர்.

இதில் பஸ்சின் வலது புறத்தில் இருந்த ஜன்னல் கண்ணாடி உடைந்தது. பஸ்சில் இருந்த வத்தலகுண்டு காமராஜ புரம் முருகன் என்பவரின் ஒரு வயது ஆண் குழந்தை காயம் அடைந்தது.

இதுபற்றி பஸ் டிரைவர் அன்புச்செல்வம் வத்தலகுண்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் மீது கல்வீசிய ஆனந்தன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com