களக்காட்டில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: வேன் டிரைவர்-கிளீனர் கைது

தென்காசியில் இருந்து வள்ளியூருக்கு நேற்று இரவு ஒருஅரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கல்வீசி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காட்டில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு: வேன் டிரைவர்-கிளீனர் கைது
Published on

களக்காடு:

தென்காசியில் இருந்து வள்ளியூருக்கு நேற்று இரவு ஒருஅரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை களக்காட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 42) என்பவர் ஓட்டி வந்தார். நடத்துனராக கீழபத்தையை சேர்ந்த சோமசுந்தரம்(42) என்பவர் இருந்தார்.

இந்நிலையில் பஸ் களக்காடு அருகே உள்ள குட்டுவன்குளம் அருகே வந்த போது மர்ம நபர்கள் 2 பேர் திடீரென பேருந்தின் பின்னால் கல்வீசி தாக்கினர். இதில் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்து டிரைவர் பாலசுப்பிரமணியன் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கோவில் அம்மாள்பிரத்தை சேர்ந்த சேன் டிரைவர் சுடலைமணி, கிளீனர் செல்வகிருஷ்ணன் ஆகியோர் பஸ் மீது கல்வீசி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com