அய்யப்பந்தாக்கல் பஸ் டெப்போவில் மாநகர பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்

அய்யப்பந்தாக்கல் பஸ் டெப்போவில் மாநகர பஸ் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அய்யப்பந்தாக்கல் பஸ் டெப்போவில் மாநகர பஸ் தீப்பிடித்து எரிந்து நாசம்
Published on

போரூர்:

அய்யப்பந்தாங்கல் பஸ் நிலையத்தில் நேற்று நள்ளிரவு மாநகர பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இன்று அதிகாலை 3 மணி அளவில் அய்யப்பந்தாங்கலில் இருந்து பிராட்வே செல்லும் (எண். 26 எம்) பஸ் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

போலீஸ் விசாரணையில் பேட்டரி கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com