பஸ் கட்டணம் உயர்வால் ரெயிலில் 6¼ லட்சம் பேர் புதிதாக சீசன் டிக்கெட் எடுத்து பயணம்

பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு புதிதாக 6 லட்சத்து 24 ஆயிரத்து 700 பேர் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள்.
பஸ் கட்டணம் உயர்வால் ரெயிலில் 6¼ லட்சம் பேர் புதிதாக சீசன் டிக்கெட் எடுத்து பயணம்
Published on

சென்னை:

தமிழக அரசு போக்கு வரத்து கழக பஸ்களின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது. அவ்வபோது கட்டணத்தை உயர்த்தாமல் 10 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று உயர்த்தியதால் பயணிகளுக்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால் பஸ் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

சென்னையில் 2000-க்கும் மேற்பட்ட மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கட்டண உயர்வால் பஸ்களில் கூட்டம் இல்லை. பள்ளிக் கூடங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் நேரங்களிலும், திரும்பும் நேரங்களிலும் மட்டும் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது.

இதனால் பஸ் கட்டண உயர்வின் மூலம் கிடைக்கும் வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. எதிர் பார்த்ததைவிட பாதி அளவுக்குதான் வருமானம் உள்ளது.

இதற்கு காரணம் பஸ் பயணிகள் புறநகர் ரெயில்களுக்கு மாறிவிட்டது தான். சென்னையில் போக்கு வரத்தில் புறநகர் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.

சென்ட்ரல்- அரக் கோணம்,சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- தாம்பரம், கடற்கரை-வேளச்சேரி என 4 மார்க்கத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவைகளில் பஸ் கட்டணத்தை விட மிகக்குறைவு என்பதால் பஸ் பயணிகள் ரெயில்களுக்கு மாறிவிட்டனர்.

இதனால் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு வருமானம் அதிகரித்துள்ளது. புறநகர் ரெயில்களின் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.2½ கோடி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த 4 புறநகர் மார்க்கத்திலும் கூடுதலாக 700 ரெயில் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கமான ரெயில் கட்டணத்தைவிட சீசன் டிக்கெட் கட்டணம் மேலும் குறைவு என்பதால் சீசன் டிக்கெட் எடுத்தும் பயணம் செய்கிறார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு புதிதாக 6 லட்சத்து 24 ஆயிரத்து 700 பேர் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்கிறார்கள்.

கடந்த ஜனவரி 21-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தினசரி டிக்கெட் எடுத்து 73 லட்சத்து 93 ஆயிரத்து 154 பேர் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு 68 லட்சத்து 86 ஆயிரத்து 743 பேர் தான் பயணம் செய்து இருந்தனர். 7 நாட்களில் 8 லட்சம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மின்சார ரெயில்களை தாமதமின்றி குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்க ரெயில்வே நிர்வா கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் தான் ரெயில் கள் தாமதமாக இயக்கப் படுகிறது. பேசின் பிரிட்ஜ்- சென்ட்ரல் இடையேயான கிராசிங்குகளால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது. வெளியூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பேசின்பிரிட்ஜ் வரை குறிப்பிட்ட நேரத்துக்கு வந்ததும் சென்ட்ரலுக்குள் நுழைய நீண்டநேரம் அங்கு நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால்தான் புறநகர் ரெயில் சேவையில் தாமதம் ஏற்படுகிறது. இதை சரி செய்யவும் கூடுதல் தண்டவாளங்கள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஸ் பயணிகள் எண் ணிக்கை குறைந்தது பற்றி போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, கட்டணம் உயர்த்தப் பட்ட பின்பு பயணிகள் எண்ணிக்கை குறைந் திருப்பது உண்மைதான்.

திடீர் என்று உயர்த்திய தால் அவர்களுக்கு கூடுதல் சுமையாக தெரிகிறது. ரெயில் கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்கிறது. பஸ் பயணம் அப்படி அல்ல, எனவே பயணிகள் மீண்டும் பஸ் பயணத்துக்கு திரும்புவார்கள். அப்போது நிலைமை சீரடைந்து விடும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com