திருச்சிற்றம்பலத்தில் பஸ் டிரைவர் மீது தாக்குதல்

திருச்சிற்றம்பலத்தில் பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தாக்குதல்
தாக்குதல்
Published on

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலத்தை சேர்ந்தவர் தங்கம். இவர் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது மழைபெய்ததால் அரசு பஸ்சில் ஏறி திருச்சிற்றம்பலம் வந்துள்ளார். அப்போது பஸ் டிரைவர் தங்கம் வீட்டுக்கு அருகில் பஸ்சை நிறுத்தாமல் சிறிது தூரம் தள்ளி இறக்கிவிட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தங்கம் பஸ் டிரைவர் போத்தியுடன் தகராறு செய்து அவரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

இதுபற்றிய புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தங்கத்தை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com