

நெல்லை:
பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் கார்த்திக் தலைமை தாங் கினார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவி கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் மீண்டும் வகுப்புகளுக்கு திரும்பி சென்றனர்.
பஸ் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ்காந்தி தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் பீட்டர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் ஆஷாத் பாட்ஷா வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் சங்கர பாண்டியன், எஸ்கேஎம்.சிவகுமார் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். முன்னாள் எம்.பி. ராமசுப்பு கண்டன உரையாற்றினார்.
இதில் பஸ் கட்டண உயர்வை அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும், ஹஜ் பயணிகளுக்கு மானியத்தை ரத்து செய்ததை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நாம் தமிழர் கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் இந்திரா குயிலி நாச்சியார், மாலிக், சக்தி பிரபாகரன், நயினார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #tamilnews