பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம்: கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருமங்கலம், மேலூரில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம்: கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
Published on

திருமங்கலம்:

தமிழகத்தில் பஸ் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகி சுப்பு காளை தலைமையில் நடை பெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மேலூரில் நடு ரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com