பஸ் மோதி சப்-இன்ஸ்பெக்டர் பலி

தேனியில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீரணன்
வீரணன்
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், சேடபட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வீரணன் (வயது 55). இவர் உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு செல்லும் சாலையில் கணவாய் மலையில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார். பணி முடிந்து இரவு மோட்டார் சைக்கிளில் உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

குஞ்சாம்பட்டி எனும் இடத்தில் சென்றபோது தேனியில் இருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

இது குறித்து தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் விரைந்து சென்று சப்-இன்ஸ்பெக்டரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com