தோட்டியோடு அருகே அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலி

தோட்டியோடு அருகே கேரள அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து
விபத்து
Published on

இரணியல்:

தக்கலை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் ஈனோக்ஜான் (வயது 46). இவர் இன்று காலை நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தோட்டியோடு அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அவர் முந்த முயன்றார். 

அப்போது எதிரே வந்த கேரள அரசு பஸ், ஈனோக் ஜானின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஈனோக்ஜான் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். 

இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஈனோக் ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com