நெல்லித்தோப்பில் பஸ் மோதியதில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பலி

நெல்லித்தோப்பில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது தமிழக அரசு பஸ் மோதியதில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் உடல் நசுங்கி இறந்து போனார்.
நெல்லித்தோப்பில் பஸ் மோதியதில் ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் பலி
Published on

புதுச்சேரி:

புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் செந்தில்நாதன் (வயது 39). திருமணம் ஆகாத இவர், புதுவை நவீனா கார்டன் பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வந்தார்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் தொழில் வி‌ஷயமாக சிலரை சந்தித்து விட்டு செந்தில்நாதன் நள்ளிரவு 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

நெல்லித் தோப்பு அண்ணா நகர் வீடடு வசதி வாரிய அலுவலகம் அருகே வந்த போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செந்தில்நாதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com