பர்ஹான் வானி நினைவு தினம்: காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இணைய சேவை துண்டிப்பு

பர்ஹான் வானி நினைவு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இரண்டாவது நாளாக காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பர்ஹான் வானி நினைவு தினம்: காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இணைய சேவை துண்டிப்பு
Published on

ஸ்ரீநகர்,

பர்ஹான் வானி நினைவு தினத்தையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இரண்டாவது நாளாக காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் வானி கடந்த ஜூலை 8 ஆம் தேதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு காஷ்மீரில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதனால், தற்போது வரை சில இடங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்த நிலையில், பர்ஹான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட ஓராண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் டிரால் உள்ளிட்ட 3 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.

பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளம் மூலம் தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்க தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் இணையதள சேவைகளை முடக்கி வைக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com