திண்டுக்கல் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் கட்டிட தொழிலாளி

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்கொலை
தற்கொலை
Published on

திண்டுக்கல்:

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக திண்டுக்கல்-நத்தம் ரோடு வாழைக்காய் பட்டி பிரிவில் உள்ள முத்தமிழ் நகரில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கிருஷ்ணன் இன்று காலை நைலான் கயிறால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகன் பால்பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தனது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுத பால்பாண்டி அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com