திருமண ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை

வெள்ளிச்சந்தை அருகே திருமண ஏக்கத்தில் கொத்தனார் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே சடையால்புதூரை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தங்கதுரை (வயது 32), கொத்தனார். திருமணம் ஆகவில்லை.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கதுரை தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி குடும்பத்தினரிடம் கூறி வந்ததாக தெரிகிறது. குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கதுரை படுக்கை அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து தங்கதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்கதுரை திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com