இரணியல் அருகே கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

இரணியல் அருகே குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

இரணியல்:

இரணியலை அடுத்த காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவர் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனையுடன் காணப்பட்டு வந்த ஸ்ரீகுமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

திருவட்டாரை அடுத்த இட்டகவேலி வடக்கு கோணத்துவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (39). இவருக்கு கடன் பிரச்சினை இருந்தது. இதனால் சதீஷ்குமார் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். கடன் தொல்லை காரணமாக மன வேதனையுடன் காணப்பட்டு வந்தவர், சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மோசஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com