கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தற்கொலை

திருச்சி திருவெறும்பூர் அருகே கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் கட்டிட தொழிலாளி தற்கொலை
Published on

திருவெறும்பூர்:

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்குமலை பெரியார் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி. இந்து என்கிற மகள் உள்ளார். சக்திவேலுக்கு கடன் தொல்லை இருந்து வந்துள்ளது. இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த அவர்,நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. 

இந்த நிலையில் துவாக்குடி அண்ணா வளைவுப் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாக வேப்பமரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவதாக துவாக்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். 

அப்போது அங்கு இறந்து கிடந்தது சக்திவேல் என்பது தெரியவந்தது. கடன் தொல்லை காரணமாக அவர் தற்கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com