புளியங்குடி அருகே விஷம் குடித்து கட்டிடதொழிலாளி தற்கொலை

புளியங்குடி அருகே மது குடிக்க மனைவி பணம் கொடுக்காததால் விரக்தியடைந்த கட்டிடதொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி இல்லம்பிள்ளை தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 37) கட்டிடத்தொழிலாளி. இவரது மனைவி செல்வின்ரோஸின். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பழனிச்சாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று மது அருந்துவதற்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனிச்சாமி விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com