ஊமச்சிகுளத்தில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை

ஊமச்சிகுளத்தில் கட்டிட தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊமச்சிகுளத்தில் கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை
Published on

மதுரை:

மதுரை ஊமச்சிகுளம்- அலங்காநல்லூர் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போ

இதையடுத்து ஊமச்சிகுளம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியனது.

படுகொலை செய்யப்பட்ட வாலிபர் ஊமச்சிகுளம் அருகே உள்ள திருமால்புரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜரத்னம் என்று தெரியவந்தது.

ராஜரத்னத்துக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் திருவண்ணாமலையில் குடியிருந்து வருகின்றனர்.

எனவே ராஜரத்னம் சக தொழிலாளியான வீரபாண்டி சரவணன் என்பவருடன் திருமால் புரத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்தார்.

ராஜரத்னம் நேற்று தொழில் வி‌ஷயமாக வீரபாண்டி சென்று உள்ளார். இந்த நிலையில் அவரின் உடல் அரிவாள் வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளது.

கொலை குறித்து போலீசார் கூறும்போது, ராஜரத்னத்தின் இடுப்பு, தலையில் அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. அவரை கொன்றது யார்? என்று தெரியவில்லை. ராஜரத்னத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. எனவே அவரை யாராவது குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் வெட்டிக் கொன்றனரா? என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார். கொலையாளிகளை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com