ராஜாக்கமங்கலம் அருகே கட்டிடத் தொழிலாளி வெட்டிக் கொலை

ராஜாக்கமங்கலம் அருகே குடிபோதையில் கட்டிடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம் அருகே கட்டிடத் தொழிலாளி வெட்டிக் கொலை
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் கல்லுக்கட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 44). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக அய்யப்பனும், ராஜம்மாளும் பிரிந்து வாழ்கிறார்கள். இதனால் அய்யப்பன் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு அய்யப்பன்  வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை வீட்டுக்குள் அய்யப்பன்  கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் ராஜாக்கமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று இரவு அய்யப்பன் வீட்டுக்கு அவரது தம்பி மகேஷ் வந்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் அவரை ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அண்ணன் என்றும் பாராமல் அவரது தம்பி மகேஷ் கொலை செய்தது தெரியவந்தது.

நேற்று இரவு 2 பேரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மகேஷ், அரிவாளால் அய்யப்பனை வெட்டிக் கொன்று தலைமறைவாகி இருக்கிறார். போலீசார் விசாரணை நடத்தி அவரை பிடித்து விட்டனர்.

கொலை செய்யப்பட்ட அய்யப்பன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com