அய்யங்குட்டிபாளையத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

அய்யங்குட்டி பாளையத்தில் மாடியில் தேங்கிய மழை நீரை அகற்றிய போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.
தவறி விழுந்து பலி
தவறி விழுந்து பலி
Published on

புதுச்சேரி:

புதுவை அய்யங்குட்டி பாளையம் ஒத்தவாடை வீதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன் (வயது 44). கட்டிட தொழிலாளி. இவருக்கு சுமதி (39) என்ற மனைவியும், அரிபிரசாத் (9) என்ற மகனும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள செந்தமிழ்செல்வன் நேற்று மழை காரணமாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டில் இருந்தார். 

அப்போது வீட்டின் மாடியில் மழைநீர் தேங்கி இருந்ததால் அதனை அகற்றும் பணியில் செந்தமிழ்செல்வன் ஈடுபட் டுக்கொண்டு இருந்தார். அப்போது போதையில் இருந்ததால் செந்தமிழ் செல்வன் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தார். 

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த செந்தமிழ்செல்வனை அவரது மனைவி சுமதி மற்றும் உறவினர்கள் மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செந்தமிழ் செல்வன் பரிதாபமாக இறந்து போனார். 

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜவேலு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com