ராயப்பேட்டையில் கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை

ராயப்பேட்டையில் இரும்பு கம்பியால் தாக்கி கட்டிட தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

சென்னை:

ராயப்பேட்டை தெய்வ சிகாமணி சாலையில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு 10-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். திண்டிவனம் அருகே உள்ள வான்தல்லாளர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்ற வாலிபரும், திட்டக்குடி லக்கூர் புதிய காலனியை சேர்ந்த முல்லைநாதன் என்பவரும் தங்கி இருந்து கட்டிட பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு இவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. செல்வம், முல்லைநாதன் இருவரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் 2 பேரையும் விலக்கி விட்டனர்.

இதன் பின்னர் நேற்று இரவு கட்டுமான பணியில் ஈடுபட்ட அனைவரும் தூங்கச் சென்று விட்டனர். இன்று காலையில் செல்வம் ரத்தக் காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் ராயப்பேட்டை போலீசார் விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். நேற்று இரவு செல்வம் தூங்கிக் கொண்டிருந்த போது, முல்லைநாதன் இரும்பு கம்பியால் தாக்கி அவரை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. முல்லைநாதன் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com