

வால்பாறை:
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்(வயது37). இவர் கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட் 2-வது டிவிசனில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். நேற்று விடுமுறை தினம் என்பதால் அருகில் உள்ள நீரோடைக்கு குளிக்க சென்றார். பின்னர் அங்கு இருந்து வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அருகில் உள்ள புதரில் மறைந்திருந்த காட்டெருமை அலெக்சை துரத்தி சென்று தாக்கியது.
இதில் அவருக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியை மீட்டு சோலையாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.