போடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பலி

போடி அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விவசாயி பலி
விவசாயி பலி
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 48). இவர் போடி மெட்டு அருகே உள்ள கள்ளிப்பாறை என்ற இடத்தில் தோட்ட காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று தோட்டத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. 

சந்தேகத்தின் பேரில் மற்ற தொழிலாளர்கள் அவரை தேடிச் சென்ற போது காட்டெருமை தாக்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. 

இது குறித்து சாந்தம்பாறை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com