பட்ஜெட் 2019- சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன்

சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுய உதவிக்குழு பெண்கள்
சுய உதவிக்குழு பெண்கள்
Published on

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

* மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை ஒழிப்பதற்காக தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன
*  அரசுத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் டிஜிட்டலில் பணம் செலுத்தும் வசதிகள் உள்ளன.
* மின்சக்தி வீணடிக்கப்படுவதை தவிர்க்க 35 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன.
* இலவச எல்இடி பல்புகளால் ரூ.18,341 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
* தொழிலாளர் முன்னேற்றத்துக்கான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும்

* தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
* பொது வாழ்க்கையில் பெண்களின் பங்களிப்பு கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது
* பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதை தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன.
* சுய உதவிக்குழு பெண்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கடன் பெற அனுமதி வழங்கப்படும்.

* பெண்கள் பங்களிப்பு மட்டுமின்றி பெண்கள் தலைமையேற்கவும் தொடங்கி விட்டனர்.

* அடுத்த 5 ஆண்டில் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி அரசு முதலீடு செய்யும்
* வீட்டுக்கடன் நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்
* பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51 சதவீதமாக நீடிக்கும்
* பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம்
* இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது
* ஏர் இந்தியா பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும்.
* பார்வையற்றோரும் தெரிந்துகொள்ளும் வகையில் 1,2,5,10,20 ரூபாய் புதிய நாணயங்கள் வெளியிடப்படும்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com