புறநானூறு வரிகளை மேற்கோள் காட்டி வரிவிதிப்பை விளக்கிய நிர்மலா சீதாராமன்

நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
Published on

பாராளுமன்றத்தில் இன்று நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

“வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்.

அதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு ‘யானை புக்க புலம்’ போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்” என்பதுதான் அந்த பாடலின் விளக்கம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com