

புதுடெல்லி:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, பட்ஜெட் நகலை வழங்கி வாழ்த்து பெற்றார். பின்னர் பாராளுமன்ற மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
வழக்கமாக பட்ஜெட் ஆவணங்களை நிதி மந்திரிகள், சிறிய சூட்கேசில் எடுத்து வருவார்கள். ஆனால் இந்த முறை சூட்கேசுக்கு ‘பை பை’ சொன்ன நிர்மலா சீதாராமன்..! அரசு சின்னம் பொறிக்கபட்ட சிவப்பு நிற உறையில் பட்ஜெட் ஆவணங்களை எடுத்து சென்றார்.
இந்தியாவை பிரிட்டிஷ் ஆட்சி செய்த போது, பட்ஜெட் தாக்கல் செய்ய சூட்கேஸ் முறையை பின்பற்ற தொடங்கினர். இந்தியா விடுதலைக்குப் பிறகும் அதே முறை தொடர்ந்தது. நிதி மந்திரிகள் சூட்கேஸ்களின் நிறத்தை மாற்றினாலும், சூட்கேஸ் நடைமுறை மாறவில்லை. அந்த பாரம்பரியத்தை நிர்மலா சீதாராமன் மாற்றி உள்ளார்.