விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் புதிய அமைப்புகள்- பட்ஜெட்டில் அறிவிப்பு

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் புதிய அமைப்புகள் ஏற்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயம்
விவசாயம்
Published on

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

* கைத்தறி துறை மூலம் 200 புதிய தொழில் மையங்கள் அமைத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
* கைத்தறி துறை மேம்பாட்டுக்காக 100 தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்
* வேளாண்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்
* தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறும்

* பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தில் புதிய சாலைகள் அமைக்கப்படும்
* விவசாய ஆன்லைன் சந்தைகள் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்
* விவசாயிகளின் மேம்பாட்டிற்காக 10 ஆயிரம் புதிய அமைப்புகள் ஏற்படுத்தப்படும்
* விவசாயத்துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது
* 2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்

* மழைநீர் சேமிப்பு மூலம் கிடைக்கும் தண்ணீரை விவசாயத்திற்கும் பயன்படுத்த நடவடிக்கை
* விவசாயிகளே இந்த நாட்டுக்கு உணவு அளிப்பவர்கள்; விவசாயத்துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது
* வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்க ‘ஹர் கர் ஜல்’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது
* தூய்மை இந்தியா திட்டத்திற்கான செயலியை ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்

* 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் ஒழிக்கப்பட்டுள்ளன

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com