

பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் சங்கீதா ஜெட்லி கூறுகையில், என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பேன். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றார். பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர்களின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார்.
மத்திய பட்ஜெட்டுக்கு மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இந்த பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்றார்.