மத்திய பட்ஜெட்: 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். #Budget2018 #UnionBudget2018
மத்திய பட்ஜெட்: 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை
Published on

புதுடெல்லி:

2018-19-ம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாய விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செலவில் இருந்து 1.5 மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என அரசு விரும்புகிறது. இதற்காக, விவசாய சந்தைகள் அமைக்க ரூ.2ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளைபொருள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பிரம்மாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

‘ஆபரேஷன் க்ரீன்’ திட்டம் மூலம் அழுகும் காய்கறிகளை பதப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும். மூங்கில் வளர்ப்பை ஊக்குவிக்க தேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் ரூ.1290 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விவசாய உள்கட்டமைப்புக்கு ரூ.22ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு கிஷன் கடன் அட்டைகள் வழங்கப்படும்.

குடிசை தொழில் மூலம் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் சிறு விவசாயிகளுக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் 8 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்படும்.

காற்றுமாசை குறைக்க புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்றுமாசுபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்களை மேற்கொள்ளப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து கல்வியின் தரத்தை மேம்படுத்த அரசு பாடுபட்டு வருகிறது. #Budget2018 #UnionBudget2018

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com