பாதுகாப்பு துறைக்கு ரூ.2.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - முன்பை விட 7.6 சதவிகிதம் அதிகம்

கடந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கு ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 7.6 சதவிகிதம் அதிகமாக ரூ.2.94 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. #Budget2018 #UnionBudget2018 #DefenceBudget
பாதுகாப்பு துறைக்கு ரூ.2.94 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு - முன்பை விட 7.6 சதவிகிதம் அதிகம்
Published on

புதுடெல்லி:

2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். மொத்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான நிதி எப்போதுமே கனிசமான அளவில் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. அதில், ஆயுதம் உள்பட ராணுவ தளவாடங்களுக்கு மட்டும் 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு பாதுகாப்பு துறைக்கான நிதி ரூ.2.94 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.6 சதவிகிதம் அதிகமாகும். ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களுக்காக இம்முறை 93 ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை பாதுகாப்பு அமைச்சகம் மிகச்சரியாக பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஒதுக்கப்பட்ட நிதியில் 6,886 கோடி ரூபாய் மட்டுமே பாதுகாப்பு அமைச்சகம் நிதி அமைச்சகத்திடம் திருப்பி அளித்துள்ளது. எல்லையில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல், சீனா உள்ளிட்ட வல்லரசுகளை சமாளிக்கும் விதமாக் பாதுகாப்பு துறையை மேம்படுத்த நவீன தளவாடங்கள் வாங்கப்பட வேண்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Budget2018 #UnionBudget2018 #DefenceBudget

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com