கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி: பட்ஜெட்டில் தகவல்

கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2018 #BudgetSession #UnionBudget2018
கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி: பட்ஜெட்டில் தகவல்
Published on

புதுடெல்லி:

நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

தொழில் தொடங்குவதை எளிமையாக்க 372 வணிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி உருவாக்கப்படும்.

2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும். தங்க மூதலீடு திட்ட நடைமுறைகள் எளிமையாக்கப்படும். காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும். ஜவுளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3,073 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வரலாற்று சிறப்பு மிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப்படும். கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 5ஜி சேவை குறித்து ஐஐடி சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆதார் முறை காரணமாக பல்வேறு திட்டங்களின் பலன்கள் மக்களை எளிதாக சென்றடைகின்றன. நாட்டில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போல தனி அடையாள அட்டை வழங்கப்படும்.

நடப்பாண்டு நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக உள்ளது; வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.3 ஆக குறையும்.

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Budget2018 #BudgetSession  #UnionBudget2018 #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com