முன்னாள் முதல் மந்திரி பட்டாச்சார்யா உடல்நிலை முன்னேற்றம்

மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்ததேவ் பட்டாச்சார்யா
புத்ததேவ் பட்டாச்சார்யா
Published on

கொல்கத்தா:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்காள முன்னாள் முதல் மந்திரியுமான புத்ததேவ் பட்டாச்சார்யா (75), உடல்நலக் குறைவால் கொல்கத்தாவின் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

தகவலறிந்த ஆளுநர் ஜக்தீப் தன்கார், முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதுதொடர்பாக, மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் கவுசிக் பாசு  கூறுகையில், டாக்டர்கள் குழு புத்ததேவ் பட்டாச்சார்யா உடல் நிலையை கவனித்து வருகிறது. அவரது சுவாசம் மேம்பட்டுள்ளது. ரத்த அழுத்தமும் ஏற்றுக்கொள்ளத்தக்க அளவிற்கு முன்னேறியுள்ளது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில்  வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com