விபத்து
விபத்து

பூதலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி

பூதலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on

பூதலூர்:

பூதலூரை அடுத்த பாலையப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமமுர்த்தி (வயது34). இவரது மனைவி மகாலட்சுமி (30). இருவரும் மோட்டார் சைக்கிளில் வளப்பக்குடிக்கு சென்றனர். அப்போது திருக்காட்டுப்பள்ளி அருகே அடஞ்சூர் பிரிவு சாலை அருகே மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 மோட்டார் சைக்கிள்களும் நிலை தடுமாறி எதிரில் வந்த லாரியில் மோதியது.

இதில் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். மகாலட்சுமி, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பழமார்நேரி அக்ரஹாரம் முத்து(25) ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். பின்னர் மகாலட்சுமி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், முத்து திருச்சி தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com