

தேசிய தொலைதொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் மணி, ஓய்வு பெற்ற ஊழியர் சங்க பொருளாளர் வணங்காமுடி, நிர்வாகி அம்மாசி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு 10 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலந்து கொண்டனர்.