பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்

தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சம்பளம் வழங்ககோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

தஞ்சாவூர்:

இந்த ஆண்டு ஜனவரி மாத சம்பளத்தை இதுவரை வழங்கப்படவில்லை அதனை உடனே வழங்க வேண்டும், மாதந்தோறும் உரிய தேதியில் சம்பளம் கொடுக்க வேண்டும், 4ஜி அலைக்கற்றை சேவையை உடனே தொடங்க வேண்டும்., பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல் அலுவலகம் வளாகத்தில் அமர்ந்து ஊழியர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் என்.எப்.டி.இ. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com