

புதுடெல்லி:
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய சலுகை திட்டங்களின் விலை ரூ.786 மற்றும் ரூ.599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய திட்டங்களுடன் கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பி.எஸ்.என்.எல். 786 மற்றும் ரூ.599:
பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள இரண்டு திட்டங்களுடன் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளதோடு ரூ.786 டாக்டைம் கிரெடிட் செய்யப்படுகிறது. புதிய திட்டத்தில் வழங்கப்படும் 3 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டாக்டைம் கொண்டு எஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது.
இதேபோன்று ரூ.599 திட்டத்தில் ரூ.507 டாக்டைம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.279 பிரத்தியேகமாக வாய்ஸ் கால்களுக்கும், ரூ.507 திட்டத்தில் அனைத்து பலன்களையும் பெற முடியும். இத்துடன் 10 ஆன்-நெட் எஸ்எம்எஸ் பெற முடியும், ரூ.279 மற்றும் 10 ஆன்- நெட் எஸ்எம்எஸ் பயன்படுத்தாத போது, 30 நாட்களுக்கு பின் அவற்றை பயன்படுத்த முடியாது.
ஃபுல் டாக்டைம் ரீசார்ஜ்களை வைத்து பார்க்கும் போது பி.எஸ்.என்.எல். ரூ.786 திட்டத்தில் 90 நாட்களுக்கு கூடுதல் சலுகை வழங்குகிறது. ரூ.110, ரூ,.210 மற்றும் ரூ.290 ரீசார்ஜ் செய்யும் போது ரூ.115, ரூ.220 மற்றும் ரூ.310 டாக்டைம் முறையே பெற முடியும். இதேபோல் ரூ.310, ரூ.510, ரூ.610, ரூ.1,010, ரூ.1,510 மற்றும் ரூ.2,010 திட்டங்களில் கூடுதலாக 10 சதவிகிதம் டாக்டைம் மற்றும் ரூ.3,100 மற்றும் ரூ.5,100 திட்டங்களில் 20 சதவிகிதம் கூடுதல் டாக்டைம் வழங்கப்படுகிறது.
முன்னதாக பி.எஸ்.என்.எல். சௌக்கா 444 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் 360 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதேபோல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் வழங்கும் மூன்று திட்டங்களை அறிவித்தது.