பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 19 கிலோ ஹெராயின் பறிமுதல்

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து 19 கிலோ ஹெராயின் பறிமுதல்

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு பகுதியில் இருந்து இன்று 19 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோடு பகுதியை ஒட்டியுள்ள அதியான் என்ற இடத்தில் எல்லை வேலிப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் வழக்கத்துக்கு மாறான நடமாட்டம் இருப்பதை அறிந்தனர்.

இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் சிலர் இந்திய பகுதியை நோக்கி முன்னேறி வந்ததை கண்ட நமது படையினர் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். விடிந்தும் விடியாத அதிகாலை இருட்டை சாதகமாக்கி ஊடுருவ முயன்றவர்கள் தப்பியோடி விட்டனர்.

பின்னர், வேலியின் ஓரம் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நமது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு கிடந்த 19 கிலோ ஹெராயின் என்னும் கொடிய போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். #tamilnews #seizesheroin

X

Maalai Malar
www.maalaimalar.com