3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்

வடக்கு திரிபுரா எல்லையில் பணியின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், சிசு பால் என்ற பாதுகாப்பு படை வீரர் 3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்டார்.
3 சக வீரர்களை சுட்டுக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பாதுகாப்புப் படை வீரர்
Published on

அகர்தலா:

இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்தின் வடக்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிசு பாலுக்கும் அவரது சக வீரர் ஒருவருக்கும் இடையே இன்று வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த சிசு பால் தனது துப்பாக்கியால் அந்த வீரரை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பியோட முயற்சித்தார். அப்போது முகாமிலிருந்த சக வீரர்கள் அவரை பிடிக்க முயன்றபோது, சுசி பால் கண்மூடித்தனமாக சுட்டதில் மேலும் 2 வீரர்கள் உயிரிழந்தனர். பிறகு அதே துப்பாக்கியைக் கொண்டு, தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #BSFjawan #sucide

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com