இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தவர்கள் 26 பேர் கைது - எல்லை பாதுகாப்பு படை அதிரடி

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்காள தேசத்தை சேர்ந்த 26 பேரை தடுத்து நிறுத்திய எல்லை பாதுகாப்புப் படையினர், அவர்களை கைது செய்துள்ளனர்.
ரோந்து பணியில் வீரர்கள்
ரோந்து பணியில் வீரர்கள்
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்தியா - வங்காள தேசம் எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள கோனா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 26 பேரை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் அவர்கள் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com