ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் பாதுகாப்பு படையினரை தாக்கி துப்பாக்கிச்சூடு

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரின் மையப்பகுதியில் பாதுகாப்பு படையினரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் தாக்குதல்: பெல்ஜியம் நாட்டில் பாதுகாப்பு படையினரை தாக்கி துப்பாக்கிச்சூடு
Published on

பிரசெல்ஸ்:

பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரின் மையப்பகுதியில் பாதுகாப்பு படையினரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் சமீபகாலமாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், அனைத்து நாடுகளிலும் பாதுகாப்பு இருமடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரின் மையப்பகுதியில் நேற்று பாதுகாப்பு பணியிலிருந்த போலீசாரை மர்மநபர் ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளான்.

பின்னர், தன்னிடமிருந்த துப்பாக்கியால் அங்கு சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். ஆனால், இதில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை. அங்கு விரைந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால், காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்நபர் பின்னர் உயிரிழந்தான்.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்புகள் குறைவு என தெரிவித்துள்ள போலீசார், நகரெங்கும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com