புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). பட்டதாரி வாலிபர். சம்பவத்தன்று இவர் தனது நண்பரை பார்க்க வேல்ராம்பட்டு துலுக்கானத்தம்மன் நகருக்கு சென்றார். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த 4 பேர் அஜித்குமாரை வழிமறித்து தகராறு செய்தனர்.
இதையடுத்து அஜித்குமார் செல்போனில் பேசி தனது அண்ணன் அருள்முருகன் (23)-ஐ வரவழைத்தார். அவர் தனது தம்பியிடம் தகராறு செய்த கும்பலிடம் தட்டி கேட்டார்.
அப்போது ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அருள்முருகனையும், அஜித்குமாரையும் தடியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அருள்முருகன் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அண்ணன்- தம்பியை தாக்கிய கும்பல் துலுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த பரூக் (23), ரமேஷ்குமார் (24), கல்வி (23) மற்றும் நாவற்குளத்தை சேர்ந்த அறிவு (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.