மது போதை தகராறில் கார் டிரைவர் கொலை- அண்ணன் வெறிச்செயல்

அரக்கோணத்தில் மது போதை தகராறில் தம்பியை அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மது போதை தகராறில் கார் டிரைவர் கொலை- அண்ணன் வெறிச்செயல்
Published on

அரக்கோணம்:

அரக்கோணம் நேதாஜி நகரை சேர்ந்தவர் தைரியநாதன் இவரது மகன்கள் லால்ஆத்மநாதன் (வயது 36).டிவி மெக்கானிக் பிரபுநாதன் (30). கார் டிரைவர் இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த லால்அத்மநாதன் அவரது தம்பி பிரபுநாதனை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடித்த பிரபுநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பிரபுநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் இது தொடர்பாக லால்ஆத்மநாதனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com