தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் - கோவை சிறையில் அடைப்பு

தாராபுரம் அருகே காதலுக்கு தூது சென்ற தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பாரதி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(வயது26).கூலி தொழிலாளி.

இவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகள் பிரியா என்பவர் தூதுவராக செயல்பட்டு வந்தார்.

சந்திரசேகரன் தனது காதலியை அடிக்கடி தனது பெரியப்பா வீட்டில் சந்தித்து பேசிவந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது தங்கையை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியான சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து அவளிடம் விசாரித்தபோது நடந்த சம்பவங்களை கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரசேகரனை கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com