39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி - டிரைவர் கைது
லண்டன் நகரின் கிழக்கே தேம்ஸ் நதிக்கரை அருகில் இன்று 39 பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே இன்று ரோந்துப் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.