பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் நடைபெற உள்ள முதல் திருமணம்

பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் முதன் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு திருமணம் நடக்க உள்ளது.
பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் நடைபெற உள்ள முதல் திருமணம்
Published on

பனிப்பிரதேச கண்டமான அண்டார்டிகாவில் முதன் முறையாக பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருவருக்கு திருமணம் நடக்க உள்ளது.

புவியின் தென் துருவமான அண்டார்டிகா முற்றிலும் பனிப்பாறைகளால் ஆனது. இங்கு மைனஸ் 9 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இங்கு இல்லை. இருப்பினும், பல்வேறு நாடுகளின் ஆராய்ச்சி மையங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றனர். அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அங்குள்ள பிரிட்டிஷ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் பிரிட்டனைச் சேர்ந்த டாம் சில்வெஸ்டர் மற்றும் ஜூலி பவ் ஆகிய இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். வித்தியாசமான முறையில் திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பிய ஜோடி, ஏன் நமது திருமணம் இங்கேயே நடக்கக் கூடாது? என யோசித்ததின் விளைவாக அண்டார்டிகாவில் முதல் அதிகாரப்பூர்வ திருமணம் நடக்க இருக்கிறது.

அண்டார்டிக் கண்டத்தின் மேற்கில் இருக்கும் அடேய்லயீட் தீவில் உள்ள ரோதரா ஆராய்ச்சி நிலையத்தில் உறைய வைக்கும் குளிரில் இந்த வார இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த சிறப்பு மிக்க திருமணத்தை ஆராய்ச்சி மையத்தின் தலைவர் நடத்தி வைக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com