

லண்டன்:
உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமான பிரிட்டீஷ் ஏர்வேஸின் கணினி சேமிப்பகம் கடந்த சனிக்கிழமை திடீரென முடங்கியது. இதைத் தொடர்ந்து, லண்டன் ஹீத்ரூ, காட்விக் மற்றும் பெல் ஃபாஸ்ட் விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தப்பட்டன.
பிரிட்டன் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களிலும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கணினி முடக்கத்தால் விமானங்களில் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து, தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்ட பிரிட்டீஷ் ஏர்வேஸின் ஹீத்ரூ, காட்விக் விமான நிலையங்களில் இருந்து விமான சேவை முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது.
கணினி முடக்கம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டுவிட்டதாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சைபர் தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.