பிரிட்டன் தேர்தலில் இழுபறி நிலை: தெரசா மே ராஜினாமா செய்ய ஜெர்மி கார்பின் கோரிக்கை

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ், தொழிலாளர் கட்சிகளிடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரசா மே தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜெர்மி கார்பின் கூறியுள்ளார்.
பிரிட்டன் தேர்தலில் இழுபறி நிலை: தெரசா மே ராஜினாமா செய்ய ஜெர்மி கார்பின் கோரிக்கை
Published on

லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை விட தொழிலாளர் கட்சி முன்னிலை வகித்துள்ளது. 

இதுவரை சுமார் 450 இடங்களுக்கு மேல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொழிலாளர் கட்சி 218 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 215 இடங்களை பிடித்துள்ளது. இதில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.  

இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தெரசா மே தனது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொழிலாளர் கட்சியின் ஜெர்மி கார்பின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய ஜெர்மி, “தெரசா மே தனது கன்சர்வேட்டிவ் தொகுதிகளை இழந்துள்ளார். வாக்குகளை இழந்துள்ளார். ஆதரவு மற்றும் நம்பிக்கையை இழந்துள்ளார். அவர்கள் வெளியேறுவதற்கு இதுவே போது என்று எனக்கு தோன்றுகிறது” என்றார்.

ஜெர்மி தான் போட்டியிட்ட இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் தெரசா மேவும் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com