சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

சீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
இடிந்து விழுந்த பாலம்
இடிந்து விழுந்த பாலம்
Published on

ஷாங்காய்:

சீனாவின் ஜியாங்சு மாகாணம் வூக்சி நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பிசியாக காணப்படும். இந்த நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாலம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்ற 3 கார்கள், 2 லாரிகளும் கீழே விழுந்தன. பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் அந்த வாகனங்கள் நசுங்கின.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாலம் இடிந்து விழுந்தபோது குறைந்த அளவு வாகனங்கள் சென்றதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

அதிக பாரம் ஏற்றி வந்த லாரியால் பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com