செருப்பை திருடிய நபரை அடித்து கொன்ற மணமகன்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் செருப்பை திருடிய நபரை மணமகன் மற்றும் அவரது நண்பர்கள் அடித்து கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செருப்பை திருடிய நபரை அடித்து கொன்ற மணமகன்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் படான் மாவட்டம் சுராஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா என்ற வாலிபரின் திருமண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முடிவில் மணமகனின் செருப்பு காணாமல் போனது. மணமகனின் நண்பர்கள் தேடியும் செருப்பு கிடைக்கவில்லை. அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்சரண் என்பவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர். அப்போது மணமகன் அவர் நண்பர்களுடன் இணைந்து ராம்சரணை கொடூரமாக தாக்கினார்.

இதில் படுகாயமடைந்த ராம்சரண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ராம்சரணின் மனைவி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சுரேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராம்சரணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செருப்பு திருடிய நபரை மணமகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com