தெலுங்கானாவில் சோகம்- இசைக்கச்சேரி இரைச்சலால் மாப்பிள்ளை திடீர் மரணம்

தெலுங்கானாவில் நடைபெற்ற திருமண வரவேற்பில் இசைக்கச்சேரி இரைச்சலால் மாப்பிள்ளை திடீரென இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண ஜோடி
திருமண ஜோடி
Published on

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ளது போதன் நகர். இந்தப் பகுதியில் திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது இசைக்கப்பட்ட இசைக்கச்சேரியின்போது மாப்பிள்ளையின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வரவேற்பு முடிந்து நேற்று திருமணம் நடந்தது. சில நிமிடங்களில் மாப்பிள்ளை திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். 

உறவினர்கள் உடனே அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, மாப்பிள்ளையின் பெற்றோர் கூறுகையில், திருமண வரவேற்பின்போது இசைக்கச்சேரி நடத்தப்பட்டது. அதிக சத்தத்துடன் இசைக்கப்பட்ட கச்சேரியால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன்பின்னரே, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

திருமணத்தின்போது இசைக்கச்சேரியால் மாப்பிள்ளை மரணம் அடைந்தது தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com