தூத்துக்குடியில் சிறுமியை மிரட்டி கற்பழித்த கொத்தனார் கைது

தூத்துக்குடியில் சிறுமியை மிரட்டி கற்பழித்ததில் கர்ப்பம் அடைந்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி கொத்தனாரை கைது செய்தனர்.
தூத்துக்குடியில் சிறுமியை மிரட்டி கற்பழித்த கொத்தனார் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பழைய காயலில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் திடீரென்று அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பாட்டி சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி, இது பற்றி சிறுமியிடம் விசாரித்தார். 

 அப்போது முத்தையாபுரத்தை சேர்ந்த கொத்தனாரான சிவலிங்கம் (21) என்பவர் தன்னை மிரட்டி கற்பழித்ததாகவும், வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார். 

இது குறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவலிங்கத்தை கைது செய்தனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com